
மத்திய செபராங்பிறை, புக்கிட்மெர்தா ஜாம்புக்கிட்தெங்கா மங்களநாயகி அம்மன்ஆலயவழக்கில், பினாங்குஇந்துஅறப்பணிவாரியம் நேற்று வெற்றிப் பெற்றது. நேற்றுக்காலை பினாங்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துக்கு சாதகமாக அமைந்தது. ஆலயத்தின் முன்னாள்தலைவர் சேகர்கந்தசாமி, வழக்கறிஞர் முன்னிலையில், சங்கங்களின் பதிவாதிகாரியின் சாட்சியுடன் ஸ்ரீமங்கள நாயகி அம்மன்ஆலயத்தை,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவிட்டது. கடந்த பல ஆண்டுகளாக இந்த ஆலயத்தின் முன்னாள் நிர்வாகத்துக்கும், தற்போதுள்ள நிர்வாகத்துக்குமிடையில் நிகழ்ந்துவந்துள்ளசர்ச்சையால், தேசியசங்கங்களின்பதிவிலாகஆலயத்தின் பதிவைரத்து செய்தது. இருதரப்புக்குமிடையில் சமரசம் காணும் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடியவே, ஆலயத்தை காப்பாற்றும் நோக்கில், இவ்விவகாரத்தில் பினாங்கு இந்து அறப்பணிவாரியம்தலையிட்டது.

இருப்பினும்தற்போதுள்ள சேகர்கந்தசாமி தலைமையிலான ஆலயநிர்வாகம், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் ,இந்த பிரச்சனையை கடந்த 2019 -ஆம்ஆண்டு நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்றதாக வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன் கூறினார்.

இவ்வட்டாரத்தில் மிகவும் பழைமை வாய்ந்த புக்கிட்தெங்கா மங்கள நாயகி அம்மன் ஆலயத்தை பினாங்கு இந்து அறப்பணி எடுத்து கொண்டு, சிறப்பாக வழி நடத்த வேண்டுமென, இவ்வட்டார இந்து பெருமக்கள் எதிர்பார்த்தபடி, இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் சாதகமாக அமைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவ ர்சொன்னார். பினாங்கு மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கும் இந்து ஆலயங்களை காப்பாற்றுவதே இந்து அறப்பணிவாரியத்தின் தலையாய பொறுப்பு என அதன் தலைவரும், மாநில துணை முதல்வருமான டாக்டர் பி.இராமசாமி குறிப்பிட்டார்.



