27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

கோலலங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் நிலத் தகுதி மாற்றம் ரத்து!

🔥 Views : 9
👁 Reading Now : 25

கோலலங்காட் உத்தாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அதன் நிலத் தகுதியை மாற்றம் செய்யும் முடிவை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு இன்று ரத்து செய்தது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். அங்குள்ள கம்போங் பூசுட் பாரு பூர்வக்குடியினர் நிலப்பகுதியை தகுதி மாற்றம் செய்யும் முடிவில் எந்த மாற்றமும் இல்லலை. மேலும், கிழக்கு கரை ரயில் திட்டத்திற்காக இ.சி.ஆர்.எல். அந்த வனத்தின் சிறிய பகுதியை தகுதி மாற்றம் செய்தது தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அவர் சொன்னார். அந்த வனப்பகுதியில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த மேம்பாட்டுப் பணிகளை மாநில அரசு ரத்து செய்துள்ளதோடு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில உரிமையும் ரத்து செய்துள்ளதாக அவர் சொன்னார். அந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மொத்த நிலப்பரப்பான 991.90 ஹெக்டர் பகுதியில் சுமார் 45 விழுக்காடு அதாவது 536.70 ஹெக்டர் பகுதியை மேம்பாட்டுப் பணிகளுக்காக நிலத் தகுதி மாற்றம் செய்ய 1985 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில நிலச்சட்டத்தின் 12ஆவது பிரிவின் கீழ் மாநில ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles