
முஸ்லீம் அல்லாதோர் மதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று பிரதமர்துறை இலாகா சமயப்பிரிவு துணையமைச்சர் அக்மாட் மார்ஜூக் ஷாரி பத்திரிக்கைச் செய்தி மக்களிடையே வேதனையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்று கெடா பாலிங் தொகுதி ம இகா தலைவர் செகு இராமசாமி தெரிவித்தார். அமைச்சரவையிலே விவாதிக்கப்படாத ஒரு சட்ட மசோதாவை புதியதாக நியமிக்கப்பட்ட இஸ்லாம் சமயப்பகுதி துணையமைச்சர் பத்திரிக்கை செய்தியாக வெளியிடுவது அவரின் அறியாமையைக் காட்டுகிறது மேலும், நல்லிணக்கத்தோடு வாழும் மலேசிய சமூகத்தில் நஞ்சை விதைப்பதோடு பொது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக செகு இராமசாமி கண்டனம் தெரிவித்தார்.

தற்போத நோய்த்தொற்று மீட்சி நடவடிக்கையில் புதிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார்.



