27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

அடையாளக் கார்டு தொலைத்துவிட்டதாக பொய் புகார் செய்ய வேண்டாம்!

🔥 Views : 5
👁 Reading Now : 47

அடையாளக் கார்டு தொலைந்து விட்டதாக பொய் புகார் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களை செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ. அன்பழகன் கேட்டுக்கொண்டார். தேசிய பதிவு இலாகா நடவடிக்கை எடுப்பதில் இருந்து தப்பிக்க இந்த பொய் புகார்களை செய்யக்கூடாது. இவ்வாண்டில் இதுவரை செர்டாங் மாவட்ட போலீஸ் 14 புகார்களை பெற்றுள்ளது. வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் அடையாளக் கார்டுகளை இழந்திருப்பதாக புகார்களை செய்துள்ளார். இதில் ஏராளமான புகார்கள் பொய் புகார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இவர்களின் அலட்சியப் போக்கால் அடையாளக் கார்டு தொலைந்து இருக்கிறது. ஆனால் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவத்தில் அடையாளக் கார்டுகளை இழந்திருப்பதாக பொய் புகார்கள் செய்துள்ளனர் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles