
அரசாங்க நிர்வாகத்திலும் நாடாளுமன்றத்திலும் பல்வேறு சீரமைப்பு கள் செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது தொடர்பில் அரசாங்கத்துடன் பக்கத்தான் ஹரப்பான் பேச்சுவார்த்தை நடத்தும். மேலும் பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். பிரதமரின் பதவிக்காலம் இரண்டு தவணைகள், கட்சி தாவல் சட்டம் மற்றும் 18 வயதினர் வாக்களிப்பது தொடர்பில் பல்வேறு சீரமைப்புகளை செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் வலியுறுத்தி வருகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பின் போது இதுகுறித்து பேசப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
