29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலேசியர்களை அழைத்து வர திருச்சி புறப்படுகிறது ஏர் மலிண்டோ

🔥 Views : 9
👁 Reading Now : 26

தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியர்களை அழைத்துவர ஏர் மலிண்டோ விமானம் மே 13-ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு கோலாலம்பூர் கேஎல்ஐஏ விமான நிலையத்திலிருந்து திருச்சி புறப்படுகிறது
என்று கிள்ளான் கேபி டிராவல்ஸ் உரிமையாளர் கே.பி. சாமி தெரிவித்தார்.
177 இந்தியப் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு ஏர் மலிண்டோ திருச்சி புறப்படுகிறது.


இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அங்கு தரை இறங்குகிறது .
பின்னர் அரை மணி நேரத்தில் திருச்சியிலிருந்து கோலாலம்பூர் நோக்கி விமானம் மீண்டும் திரும்புகிறது. அங்கிருந்து திரும்பும் ஏர் மலிண்டோ விமானத்தில் இதுவரை 60 மலேசியர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இன்னும் இடம் காலியாக இருப்பதால் தமிழகத்தில் தங்கி இருக்கும் மலேசிய பிரஜைகள் இந்த சிறப்பு விமானத்தில் மூலம் நாடு திரும்பலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு கே.பி. சாமி 0162626755 அல்லது நிர்வாகி கவின் 016 2229341.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles