34 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

தீ விபத்தில் திவ்யா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது! செலாயாங் எம்பி நேரில் ஆறுதல்

சுங்கை பூலோ கம்போங் பாரு குண்டாங்கில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயது திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். 80 விழுக்காடு தீப்புண் காயங்களுக்கான அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்த வேலையில் அவரது 3 வயது தம்பி விஷ்ணு தீப்புண் காயங்களுடன் காப்பாற்றப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு படை இயக்குனர் நோராசம் தெரிவித்தார்.

தீ சம்பவம் ஏற்பட்ட நேரத்தில் அவர்களின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததாக கூறப்பட்டது. இதனிடையே சம்பவத்தைக் கேள்விப்பட்டு செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங், செலாயாங் கவுன்சிலர் ஏண்டி முனியாண்டி, குவாங் தொகுதி கெஅடிலான் ஒருங்கிணைப்பாளர் புவான் சலாசியா ஆகியோர் அங்கு விரைந்தனர். தீ விபத்தில் திவ்யா உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனை தருவதாக வில்லியம்ஸ் லியோங் தெரிவித்தார். தீப்புண் காயங்களுக்கான ஆளான சிறுவன் விஷ்ணு இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்தில் அன்பு மகள் திவ்யாவை இழந்திருக்கும் பெற்றோருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக வில்லியம்ஸ் லியோங் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles