28.5 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

டத்தோ அமாட் மஸ்லானுக்கு பெர்சத்து, 4 சுயேட்சை எம்பிக்கள் ஆதரவு தரவில்லை

மக்களவைத் துணைச் சபாநாயகர் பதவிக்கு பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ அகமட் மஸ்லானுக்கு பெர்சத்து மற்றும் 4 சுயேட்சை எம்பிக்கள் ஆதரவு தரவில்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ புவாட் ஸார்காசி தெரிவித்தார். டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த பதிவுக்கு டத்தோ அமாட் மஸ்லான் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இப்போது பழி வாங்குகிறார்கள் என்றார் அவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எதிர் நோக்கி இருப்பதால் இவருக்கு ஆதரவு தர அவர்கள் முன்வரவில்லை. அரசாங்கம் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் லிம் குவான் எங் பிரதான மேடையில் இருந்தார். இவரும் ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். அப்படி இருக்கையில் எதற்கு இரட்டை வேடம் என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles