29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

ஒரு நாளைக்கு பத்து வெள்ளி சம்பாதிக்க முடியாத நிலையில் டாக்ஸி
ஓட்டுனர்கள் படும் துயரம்

🔥 Views : 9
👁 Reading Now : 32
File Picture

இந்நாட்டில் டாக்ஸி ஓட்டுனர்கள் அனுபவித்து வரும் வேதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன என்று காலங்காலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கும் டாக்ஸி ஓட்டுநர்கள் தங்களது வேதனைகள் வெளிப்படுத்தினர்.
கிராப் வருகையால் முன்பு பாதிக்கப்பட்டோம். இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நோய் தொற்றால் ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்து பரிதவிக்கிறோம் என்று கோலாலம்பூர் சிலாங்கூர் கும்புலான் ஜுவாரா லீமா இந்திய டாக்ஸி ஓட்டுனர் சங்க தலைவர் காந்தி சந்திரசேகரன் தெரிவித்தார்.
நாட்டில் அமல்படுத்தப் பட்டிருக்கும் மூன்றாவது மக்கள் நடமாட்டம் கட்டுப்பாட்டு உத்தரவால் டாக்ஸி ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இரண்டு முறை இந்த உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தோம்.


இப்போது மூன்றாவது முறையாக இந்த உத்தரவு எங்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தி இருப்பதாக அவர் சொன்னார்.
தினமும் டாக்ஸிக்கு வாடகை பணத்தை கட்ட வேண்டும்.
காலையிலிருந்து மாலை வரை ஓடினால் தான் எது கொஞ்சம் சம்பாதிக்க முடியும். அதை வைத்துதான் குடும்பத்தை காப்பாற்ற முடிந்தது.
ஆனால். இப்போது இந்த உத்தரவால் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது யாரும் டாக்ஸியை பயன்படுத்தவில்லை இந்நிலையில் ஒரு நாளைக்கு பத்து வெள்ளிக்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்றார் அவர்.
டெக்ஸிகான வாடகை பணத்தை கட்ட வேண்டும் என்று டாக்ஸி நிறுவனங்கள் நெருக்குதல் கொடுத்து வருகின்றன.
ஒரு நாளைக்கு பத்து வெள்ளி சம்பாதிக்க முடியாது நிலையில் எப்படி வாடகை பணத்தை செலுத்துவது, வீட்டிற்கு தேவையான பொருட்களை எப்படி வாங்குவது என அவர் கேள்வி எழுப்பினார். வருமானம் இல்லாததால் ஒட்டுமொத்த டாக்ஸி ஓட்டுனர்கள் குடும்பமும் இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு அரசாங்கம் ஏதாவது ஒரு வழியில் உதவி புரிய வேண்டும். இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாங்கள் இதை துயரத்தை அனுபவிப்பது என்று காந்தி சந்திரசேகரன் வேதனையோடு குறிப்பிட்டார்.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles