31.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனைக்கு 32 கட்டில்களை டத்தோ லீ சோங் வெய் வழங்கினார்

🔥 Views : 22
👁 Reading Now : 64

பணி ஓய்வுப் பெற்ற தேசியப் பூப்பந்து விளையாட்டாளர், டத்தோ லீ சோங் வெய் கொடுத்த நிதியால் புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனையில் 32 புதிய படுக்கைகளுடன் ஒரு புதிய வார்டு அமைக்கப்பட்டது என்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்டீவன் சிம் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு டத்தோ லீ சோங் வெய் அறவாரியம் 2 லட்சத்து 43,000 வெள்ளி நிதியுதவி வழங்கியது. அந்த மருத்துவமனையில் கூடுதல் இடம் நிர்மாணிப்பு வேலைகளை நேரில் சென்று நான் பார்த்தேன். இதன் மூலம் புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனைக்குக் கூடுதலாக 32 படுக்கைகள் இருக்கிறது. இதில் மோசாமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே சிகிச்சையளிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles