
மறுசுழற்சிக்காக குப்பைகள் கொட்டும் தொட்டியில் பச்சிளம் குழந்தையின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். பண்டார் ஸ்ரீ புத்ரா பாங்கியில் நேற்று மாலை இந்த பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஸாக்கி தெரிவித்தார். மறுசுழற்சிக்காக வைக்கப்பட்ட குப்பைத்தொட்டியில் குப்பைகளை எடுக்கச் சென்றபோது பொதுமக்களில் ஒருவர் இந்த குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சியுற்றார். இந்த குழந்தையின் சடலத்தை கைவிட்ட சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் 017-4333795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.



