
Malaysia petronas Cub brix மோட்டார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இலக்கில் இளம் வீரர் மதன் குமரன் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். Yamaha 110cc பிரிவில் மொத்தம் 24 வீரர்களுடன் இவரும் பலப்பரீட்சை நடத்திவருகிறார். இன்றும் நாளையும் சிப்பாங் அனைத்துலக மோட்டார் பந்தய அரங்கில் நடக்கும் போட்டியில் இவர் பங்கேற்கிறார். இதுவரை இரண்டு சுற்றுகள் முடிவில் மதன் குமரன் புள்ளிப் பட்டியலில் ஆளாவது இடத்தில் இருக்கிறார். Malaysia petronas Cub brix போட்டியில் தாம் பங்கேற்பதற்கு முழு ஆதரவு வழங்கியவர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் என்று மதன் குமரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வழங்கிய ஆதரவினால் இந்த போட்டியில் பங்கேற்க முடிந்ததாக குறிப்பிட்ட அவர் இதில் ஒரே இந்திய இளைஞர் நான் மட்டுமே என்று அவர் சொன்னார்.



