
சுங்கை பூலோ கம்போங் பாரு குண்டாங் தம்பானானில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயது திவ்யா மற்றும் தம்பி விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தனர். செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங், செலாயாங் கவுன்சிலர் ஏண்டி முனியாண்டி, குவாங் தொகுதி கெஅடிலான் ஒருங்கிணைப்பாளர் புவான் சலாசியா ஆகியோர் இன்று திவ்யாவின் இல்லத்திற்கு சென்று இரு பிள்ளைகள் பறி கொடுத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஆறுதலை கூறினர். இது ஒரு துயரமான சம்பவம் என்று குறிப்பிட்ட செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம்ஸ் லியோங் தனது சார்பில் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.



