26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

சுய பரிசோதனை கருவிகளை ஒரு சிலரே கூடுதல் விலைக்கு விற்றனர்

🔥 Views : 8
👁 Reading Now : 69

கோவிட் -19 சுய பரி சோதனை கருவிகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்ற 34 வழக்குகளை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் நேற்று வரை நாடு முழுவதும் 1,800 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக இந்த குற்றம் கண்டறியப்பட்டதாக அதன் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார துறை துணை அமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார். விலை கட்டுப்பாடு மற்றும் அதிக இலாப எதிர்ப்பு சட்டம் 2011 கீழ் ஒரே ஒரு வழக்குக்கு 250 வெள்ளி அபராதம் வசூலிக்கப்பட்டது. கண்டு பிடிக்கப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை கவலைக்குறியதல்ல என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles