26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தேசிய ரத்த வங்கிக்கு உதவும் வகையில் கெராக்கான் கட்சியின் மாபெரும் ரத்ததான முகாம்

🔥 Views : 8
👁 Reading Now : 64

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தற்போது அதிகளவில் ரத்தம் தேவைப்படுகிறது மேலும் தற்போது தேசிய ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு அதற்கு உதவும் வகையில் கெராக்கான் கட்சி ரத்ததான முகாமை மிகப்பெரிய அளவில் நடத்தியது. கெராக்கான் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் ரத்ததானம் செய்து உதவி புரிந்தார். கெராக்கான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் உட்பட பல முக்கிய தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து ஆதரவு தெரிவித்தனர் என்று கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவு பேரவையின் துணை சபாநாயகர் பிரபாகரன் தெரிவித்தார். தேசிய ரத்த வங்கிக்கு உதவும் வகையில் கெராக்கான் கட்சி தொடர்ந்து அதிகளவில் ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்யும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles