
அரசாங்கத்துடன் எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெஜூவாங் கட்சி கையெழுத்திடாது என அக்கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். அரசாங்கத்தின் தவறுகளை கண்காணித்து சுட்டிக்காட்டுவதில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு சுதந்திரமாக இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க எதாவது சலுகைகள் கிடைப்பதாக இருந்தால் அது நியாயம் இல்லை. கிட்டத்தட்ட அதுவும் லஞ்சத்திற்கு சமமாகும் என்று அவர் தெரிவித்தார். எனவே பெஜூவாங் கட்சியை பொறுத்தவரை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடும் பேச்சுக்கே இடமில்லை என்று டாக்டர் மகாதீர் திட்டவட்டமாக அறிவித்தார்.
