
கோலா குபு பாரு சுங்கை கெடோங்டோங் ஆற்றில் சிக்கி கொண்ட ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். திடிரென ஆற்றில் நீரோட்டம் உயந்ததால் அங்கு சிக்கிக்கொண்ட 9 பேரை தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் காப்பாற்றினர். நீர் மட்டம் உயர்ந்ததால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்ட 16 முதல் 20 வயதுடைய இளைஞர்களை தீயணைப்பு படையினர் பாதுகாப்புடன் மீட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு துறையின் இயக்குனர் நோர்ஸாம் தெரிவித்தார்.
