
தேசிய முன்னணிக்கு துரோகம் இழைத்து அணி தாவியர்கள் மானம் இல்லாதவர்கள் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கடுமையாக சாடினார். அணி தாவியர்களின் நடவடிக்கையானது ஒரு துரோகச் செயல் ஆகும். மக்கள் தங்களுக்கு வழங்கிய நம்பிக்கைக்கு இவர்கள் துரோகம் இழைத்துள்ளனர். பணத்திற்காக ஆசைப்பட்டு இவர்கள் அணி தாவியுள்ளனர். நீதிமன்றத்தில் குற்றம் சட்டப்படுவோம் என்று பீதியால் இவர்கள் அணிதாவி இருக்கிறார்கள். இவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் கடுமையாக சாடினார். கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ தோல்வி கண்டு ஆட்சியைப் பறிகொடுத்ததும் 15 நாடாளுமன்றம் எம்பிக்கள் அணி தாவி பெர்சத்து கட்சியில் சேர்ந்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது.
