24.7 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

6 மில்லியன் அமெரிக்க டாலரைத் திருடியதாகப் புகார் கிடைக்கவில்லை!

🔥 Views : 17
👁 Reading Now : 41

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை செய்த ஒரு வழக்கில் 6 மில்லியன் அமெரிக்க டாலர் ரொக்கத்தைத் திருடியதாக போலீசுக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லை என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர், டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் தெரிவித்தார். இப்பணத்தைத் திருடியதால் ஆணையத்தின் 3 மூத்த அதிகாரிகள் தடுப்பில் வைக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத் தளங்களில் பரவிய செய்தியை போலீஸ் கருத்தில் கொண்டது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை போலீசுக்கு இதுவரை எந்த போலீஸ் புகாரும் கிடைக்கவில்லை என்பதை தேசிய போலீஸ் படை உறுதிப்படுத்த விரும்புகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles