
மைசெஜாத்திரா செயலி வாயிலாக பதிவுச் செய்து பேரங்காடிகளுக்குச் சென்றவர்களில் 523 பேருக்கு கோவிட் தொற்றுக்கான ஆபத்து கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் தெரிவித்தார். அவர்களில் 18 விழுக்காட்டினருக்குப் பேரங்காடியில் தொற்றுக் கண்டுள்ளது. இவர்களில் தொற்றுக் கண்டவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அடங்குவர். அதனால் பேரங்காடிகளுக்குள் நுழைபவர்கள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்கள் கடுமையாகக் கண்காணிக்க வேண்டும். இது உண்மையில் அங்குள்ள பாதுகாவலர்கள் முறையாக கவனிக்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர் என்பதைத்தான் காட்டுகிறது என்று அவர் சொன்னார். இதன் அடிப்படையில் பொது மக்களைப் பேரங்காடிகள், மளிகைக் கடைகளில் நுழைய அனுமதிப்பதற்கு முன்பு அவர்களின் மை செஜாத்திரா தகுதியைப் பார்க்க வேண்டும் என்று உரிமையாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
