
பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் வயது குறைந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்றவை பெண்களை பாதிக்கும் விவகாரங்கள் என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு இன்று தெரிவித்தார். இவற்றுக்கு தீர்வு காண கவனம் செலுத்த வேண்டும் தவிர மாதவிடாய் அணையாடை விளம்பரத்தில் கவனம் செலுத்துவது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார். பாலியல் வன்முறை தொடர்பான கேலிப்பேச்சு வயது குறைந்த பெண்களுக்கு திருமணம் போன்ற விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
