32.4 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

தமிழக பிரஜைகளை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்

🔥 Views : 27
👁 Reading Now : 40

மலேசியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பிரஜைகளை காப்பாற்ற தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன் வர வேண்டும் என மலேசிய மக்கள் கமுனிகேஷன் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தலைவர் முத்து கேட்டுக்கொண்டார். தற்போது மலேசியாவில் தமிழக தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மலேசியாவில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழக பிரதிகள் தாயகம் செல்வதில் பெரும் பிரச்சினை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
ஆகவே இவர்களை பத்திரமாக தாயகம் அழைத்துச் செல்ல தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்வர வேண்டும்.


சிறப்பு விமானம் மூலம் தமிழ்ப் பிரஜைகளை தாயகம் திரும்பி அனுமதி வழங்கப்பட்டாலும் இன்னும் பலர் இங்கு சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதநேய அடிப்படையில் அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முத்து கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles