33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

இந்திய பிரஜைகள் பத்திரமாக தாயகம் திரும்பினர்

🔥 Views : 9
👁 Reading Now : 48

மலேசியாவில் சிக்கிக் கொண்ட 150க்கும் மேற்பட்ட இந்திய பிரஜைகள் இன்று ஏர் மலிண்டோ சிறப்பு விமானத்தின் மூலம் திருச்சி புறப்பட்டனர். இன்று பிற்பகல் 12 மணிக்கு கோலாலம்பூர் கேஎல்ஐஏ விமான விமானத்திலிருந்து அவர்கள் சிறப்பு விமானத்தில் தாயகம் புறப்பட்டனர்.
ஏர் மலிண்டோ சேல்ஸ் மேனேஜர் அரசு மற்றும் கே பி சாமி டிராவல்ஸ் உரிமையாளர் கே பி சாமி அவரது புதல்வரும் கே.பி. டிராவல்ஸ் நிர்வாகியுமான கவின் ஆகியோரும் இந்திய பிரஜைகளை பத்திரமாக வழிஅனுப்பி வைத்தனர்.
கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட அந்த சிறப்பு விமானம் இந்திய நேரப்படி இரண்டு மணிக்கு திருச்சி சென்றடையும்.


பின்னர் அரைமணி நேரம் கழித்து 45 மலேசியா பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் மீண்டும் கோலாலம்பூர் திரும்புகிறது என்று கே பி சாமி தெரிவித்தார். மலேசியாவில் இன்னமும் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய பிரஜைகள் தாயகம் திரும்ப ஜம் விரும்பினால் கேபி டிராவல்ஸ் பஸ் நிறுவனத்தை நடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்
தொடர்புக்கு கேபி சாமி 016 – 2626755, கவின் 016-2229341

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles