31 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

நோன்புப் பெருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

🔥 Views : 8
👁 Reading Now : 34

புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்த பின்னர் முஸ்லிம் பெருமக்கள் இன்று நோன்புப் பெருநாளை எளிமையாக கொண்டாடுகிறார்கள்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நோய்த் தொற்று தாக்கத்தினால் இம்முறை கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் பொது உபசரிப்பும் நடைபெற அனுமதி இல்லாததால் வீட்டில் இருந்தவாறே நோன்புப் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.


இந்நிலையில் அனைத்து முஸ்லிம் பெருமக்களுக்கும் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கெஅடிலான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தமது வாழ்த்து செய்தியில், மலேசியர்கள் ஒற்றுமையை பேணும் படி கேட்டுக்கொண்டார். மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்,கிம்மா தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம்,ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங், அமானா தலைவர் மாட் சாபு உட்பட பல தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles