33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

ஒன்று சேர்ந்து நோய்த் தொற்றை முறியடிப்போம்!

🔥 Views : 8
👁 Reading Now : 27

நாட்டு மக்களை பல்வேறு விதத்தில் வதைத்து துன்புறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் 19 பெருதொற்று பரவலை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முழுமூச்சாக பாடுபடுவோம் என்று தெனாகா நேஷனல் இயக்குநர் வாரிய உறுப்பினர் டத்தோ என்.ரவிச்சந்திரன் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது. அனைவரின் புரிதலும், ஒத்துழைப்பும் இதில் மிக மிக அவசியம். ஒவ்வொரு பெருநாளும், அதன் பொது விடுமுறையும் ஒரு தனிப்பட்ட இன, மதத்தவர்களுக்கான கொண்டாட்டம் என்பதைக் கடந்து மலேசிய மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் விழாக்கள் என்பதால் இந்த கோவிட் 19 இக்கட்டான காலகட்டத்தில் அதனை கூட்டமில்லாமல் மிதமான அளவில் கொண்டாடுவோம் என்று டத்தோ ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles