32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

நடமாட்ட உத்தரவால் வியாபாரிகள் பாதிப்பு

🔥 Views : 22
👁 Reading Now : 66

நாட்டில் மூன்றாவது முறையாக அமுல்படுத்தப்பட்டு இருக்கும் மக்கள் நடமாட உத்தரவால் சிறு வியாபாரிகளும் நடுத்தர வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வியாபாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பாதிப்புகளை அவர்கள் எடுத்துக் கூறினர்.
ஏற்கெனவே இரண்டு முறை எம் சி ஓ உத்தரவால் பாதிக்கப்பட்டோம்.
இப்போது மூன்றாவது முறையாக இந்த உத்தரவால் பெரும் பாதிப்பை எதிர் நோக்குவோம்.


வங்கிக் கடனை திரும்பத் திரும்பச் செலுத்துவது மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
வருமானம் பெருமளவில் பாதித்து விட்டது. இந்நிலை நீடித்தால் வியாபாரத்தை மூட வேண்டியதுதான் என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
30 விழுக்காடு தொழிலாளர்களை பெயரை நீக்க வேண்டிய நெருக்கடிக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு உதவ அரசாங்கம் 5,000 வெள்ளி சிறப்பு மானியத்தை ஒதுக்கு வேண்டும். மின்சாரக் கட்டணத்தில் 15 விழுக்காடு கழிவு வழங்கப்பட வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை முன் வைத்திருப்பதாக சார்லஸ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles