31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலாக்கா மாநில அரசாங்கம் எந்நேரத்திலும் கவிழலாம்! 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானுக்கு ஆதரவு

🔥 Views : 7
👁 Reading Now : 45

நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு தாவவிருப்பத்தால் மலாக்கா மாநில அரசாங்கம் எந்நேரத்திலும் கவிழலாம் என பரவலாக பேசப்படுகிறதுஅந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ( SD ) கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது.இதனால் அம்னோ ஆட்சியில் இருந்து வரும் மலாக்கா மாநில அரசாங்கம் விரைவில் கவிழும் என்ற தகவல் பரவலாக வீசுகிறது.இது உண்மையானால் மலாக்கா மாநில முதல்வர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி மாநில ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும்.இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் கூட்டணிக்கு தாவினால் 15 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் மலாக்காவில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்பது திண்ணம். இதன் முதல் நடவடிக்கையாக சம்பத்தப்பட்ட நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று காலை மலாக்கா ஆளுநரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலாக்கா ஆளுநரை சந்திக்க முயன்று வருவதாகவும் சொல்லப்படுகிறது .இந்த தகவலால் மலாக்கா ஆளுநரின் அலுவலகத்தை போலீசார் கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles