32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ஸ்கூடாய் புக்கிட் கெமிலாங் ஆலய மண் சரிவு விவாகரம்! ஜொகூர் மஇகா கை நழுவ கூடாது!

🔥 Views : 12
👁 Reading Now : 70

இங்குள்ள , ஜொகூர் புக்கிட் கெமிலாங் கோயில் மண் சரிவு விவகாரத்தில் தொகுதி மஇகா கை நழுவுவதை நிறுத்தி கொண்டு செயலில் இறங்க வேண்டும் என ஜசெக சந்திர சேகரன் வேண்டுகோள் விடுத்தார். கடந்த மாதம் 5 ஆம் தேதி மண்சரிவின் காரணமாக ஆலயத்தின் ஒரு பகுதி முற்றாக அழிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை முன்னிட்டு அந்த ஆலயத்திற்கு சென்று பார்வையிட்ட சந்திர சேகரன் அந்த மண் சரிவு ஒரு இயற்கை பேரிடர் எனவும்,எனவே மாநில முதல்வர் திரு அஸ்னி முகமாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்ட பேரிடர் சிறப்பு நிதி ஒன்றை அந்த ஆலயத்திற்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு நேற்று முன் தினம் அந்த ஆலய வளாகத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் மாநில மஇகாவும் தொகுதி மஇகாவும் அந்த ஆலய விவகாரத்தை மாநில முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று ஏதாவது முயற்சியில் இறங்காமல் சாக்கு போக்கு சொல்லி ஆலைய நிறுவாகத்தை சமாதானம் செய்வதை நிறுத்தி கொண்டு செயலில் இறங்க வேண்டும் என சந்திர சேகரன் நினைவு படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles