
அந்நிய நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று சிலாங்கூர் தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் தெரிவித்தார். சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்கும் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை ஊக்கமூட்டும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார். அந்நிய நாட்டினரை நாம் ஒதுக்கி விடமுடியாது. உணவகம், மார்க்கெட், உட்பட எங்கும் அவர்கள் நம்முடன் இருக்கின்றனர். அந்நிய நாட்டினரை தவிர்த்து நாம் மட்டும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. அவர்களுக்கும் தடுப்பூசி அவசியம் என்று அவர் சொன்னார்.
