33.5 C
Kuala Lumpur
Friday, July 10, 2026

Vetri

18 வயதினர் வாக்காளர் என்பதை உறுதி செய்ய அனுமதி

🔥 Views : 11
👁 Reading Now : 52

வாக்காளர் ஆகவிருக்கும் 18 வயதுக்கும் மேற்பட்ட இளையோர் அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி தங்கள் விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இயல்பாக வாக்காளராவதற்கான முன்பதிவை இரு வழிகளில் இம்மாதம் இறுதி வரை சரிபார்க்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் கூறினார். முதலாவது வழி, mysprsppa.spr.gov.my என்ற அகப்பக்கத்தை பயன்படுத்தி தகவல் அறிவது அல்லது நாடு முழுவதும் உள்ள 594 சரி பார்க்கும் மையங்களுக்குச் சென்று தங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்கான . குறியீட்டை ஸ்கேன் செய்வது ஆகிய வழிமுறைகளை பயன்படுத்தலாம் என அவர் சொன்னார். இயல்பாக வாக்காளராகும் முன்பதிவை சரிபார்ப்பதற்கான இந்த ஒரு மாத காலத்தில் வாக்காளர்கள் தங்கள் விபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம. தவறுகள் ஏதும் இருப்பின் புகார் செய்யலாம். அதன் பிறகு அவர்கள் இயல்பாகவே வாக்காளர்களாக ஆக்கப்படுவர் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles