
உணவகத்தில் குடித்துக் கொண்டிருந்தபோது , நிகழ்ந்த சண்டை தொடர்பில் போலீசார் 12 ஆடவர்களை கைது செய்துள்ளனர். இங்கு ஜாலான் பாக்குவார் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 .35 மணியளவில் நிகழ்ந்தது. கருத்து வேறுபாட்டினால் அவர்களுக்கு இடையே சண்டை மூண்டதாக பினாங்கு மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் துணை தலைமை கமிஷினர் ரஹிமி முகமட் ராய்ஸ் கூறினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவியத்தைத் தொடர்ந்து 20 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்ட அவர்களை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
