
சுடிர்மான் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் மலேசியா குழுவுக்கு விளையாடி வரும் இளம் வீராங்கனை கிஷோனாவை இனத்துவேஷமாக முகநூலில் திட்டிய சம்பவத்தை இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு வன்மையாக கண்டித்துள்ளது. அனைத்துலக அரங்கில் நாட்டிற்கு புகழைத் தேடித் தரும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களை இனத்துவேச ரீதியில் தாக்குவது முறையல்ல என்று இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா 3 -2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிஷோனா 21-20, 18-21, 19-21 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவின் ஜோர்ஜியா மார்ஸ்கா என்பவரிடம் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தோல்வி கண்டார். Borhan che Rahim தனது முகநூலில் Bam kutip India (keling) dlm estate mana la jd pmain utama Malaysia என்று மிக மோசமாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
