
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் ஆளும் கட்சியும் இணைந்து செய்துகொண்ட புரிந்துணர்வு அடிப்படையின் கீழ், நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் அஜிஸுடன் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் விடுபட்டுப் போன சமூக பொருளாதார பிரச்சனைகள், முறையாகச் செயல் படுத்தாமல் தோல்வியுற்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது . இந்திய சமுதாயம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் தலைமையேற்க டோனி புவா, பி கே ஆர் கட்சியிலிருந்து சைபுடின் நசுத்தியோன் , அமனா கட்சியிலிருந்து சுல்கிப்லி அஹமட் மற்றும் நானும் கலந்து கொண்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் தெரிவித்தார். பி-40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களின் மத்தியில் தொழில் முனைவர்களை உருவாக்குதல் , மலேசிய இந்தியர்கள் உருமாற்று கட்டமைப்பான மித்ராவிற்கு கூடுதல் அதிகாரங்கள் கொடுப்பது , தமிழ்ப்பள்ளிகளின் கட்டங்கள் தரம் உயர்த்துதல் ,நாட்டின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்குடைமையை தற்பொழுதுள்ள 1.2% இருந்து மேலும் உயர்த்துதல், இந்தியர்களுக்கென உள்ள தொழிற் பயிற்சி கழகங்களை அதிகரித்தல் போன்றவை குறித்து நிதி அமைச்சருக்கு விளக்கப்பட்டது இந்தியத் தொழில் முனைவர்களை உருவாக்க 5 கோடி வெள்ளி தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
