
ஒரு விரிவுரையாளர் ஆற்றிய உரையில் பிற சமயங்களை இழிவுப்படுத்தியதாக அம்னோவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தளபிக் போலீசில் புகார் செய்துள்ளார். இந்து, பௌத்த, டயாக் சமூகத்தினர் மட்டுமின்றி பிற சமயத்தினரின் நெறிமுறைகளையும் மிகவும் இழிவுப்படுத்திப் பேசியுள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் பௌத்த, இந்து, டயாக் சமயத்தினர் இஸ்லாமியர்களைக் கொலை செய்திருப்பதாகவும் மலேசியாவில் இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.



