33.5 C
Kuala Lumpur
Friday, July 10, 2026

Vetri

ஒன்றாகத்தான் மலாக்காவை மீட்சிப்படுத்தினோம், ஆனால் அவர்களே சொந்தமாக வீழ்த்தி விட்டார்கள்

🔥 Views : 10
👁 Reading Now : 51

ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைக் குறித்து மலாக்கா மாநில முதல்வர், டத்தோஸ்ரீ உத்தாமா சுலைமான் மாட் அலி வருத்தமும் கவலையும் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் மாநிலத்தின் சுகாதார மற்றும் பொருளாதார அம்சங்களை மீட்சிப்படுத்துவதில் என்னுடன் சேர்ந்து களமிறங்கியவர்கள். ஆனால் இறுதியில் அவர்களே அதைப் பாழாக்கி விட்டார்கள். இன்றைய நிலையில் இது மிகவும் வருத்தமான ஒன்றாகத்தான் இருக்கிறது. நாங்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முயற்சித்தோம். இதில் இப்போதுதான் மலாக்கா 3ஆம் மீட்சி கட்டத்திற்குச் சென்றிருக்கும் நிலையில் அவர்கள் அதைச் சீர்குலைத்து விட்டார்கள் என்றார். டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்து விட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles