28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மலாக்காவில் இடைத்தேர்தல் தேவையில்லை! மீண்டும் ஆட்சிபுரிய பக்கத்தானுக்கு வாய்ப்பு வழங்குங்கள்!

🔥 Views : 9
👁 Reading Now : 39

மலாக்கா மாநிலத்தில் மீண்டும் ஆட்சி புரிய பக்கத்தான் ஹரப்பானுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் கோரிக்கை விடுத்துள்ளார். மலாக்காவில் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் இந்த மாநிலம் எந்த வகையிலும் பின்தங்கி விடாது. பக்கத்தான் ஆட்சியில் மலாக்கா மேம்பாடு காணும் என்றார் அவர். நோய்த்தொற்று மற்றும் அதிக அளவில் பணம் செலவாகும் என்பதால் இப்போதைக்கு மலாக்காவில் தேர்தல் நடத்த தேவையில்லை என்று அவர் கூறினார். மலாக்கா மாநில முதல்வர் சுலைமானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட 4 சட்டமன்ற உறுப்பினர்களில் சுங்கை ஊடாங் அம்னோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருணும் அடங்குவர் என்பது குறிப்பிடப்பட்டது. இரண்டு அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு சுயேட்சை மற்றும் ஒரு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் ஆதரவை மீட்டுக் கொண்டால் மலாக்காவில் அம்னோ தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்து உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles