28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தேசிய மீட்சி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் பினாங்கு மாநிலம்

🔥 Views : 8
👁 Reading Now : 27

தேசிய மீட்சி திட்டத்தின் கீழ் பினாங்கு மாநிலம் மூன்றாம் கட்டத்திற்கு செல்லுமேயானால் அதற்காக பல்வேறு நடவடிக்கை திட்டங்களை செபராங் பிறை மாநகர் மன்றம் மேற்கொள்ளுமென செபராங் பிறை மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ ரோசாலி முகமட் கூறினார். இந்த திட்டத்தின் வாயிலாக பொது சந்தை,செபராங் பிறையின் உணவுத் தலங்கள்.இரவுச் சந்தை,உழவர் சந்தை,பொழுது போக்கு இடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் போன்ற இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்ட வரைவுகள் உள்ளதாக அவர் சொன்னார். செபராங் பிறையில் மிகவும் பிரச்சனைக்குரிய 14 பொது சந்தைகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கோவிட் -19 தொற்றால் அந்த வணிகப்பகுதிகள் மூடப்படக்கூடாது. செபராங் பிறை மாநகர் மன்றத்தின் தேசிய மீட்சி திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் திறக்கப்படும் போது சந்தைகள்,உணவுக் கடைகள்,இரவு சந்தைகள்,காலை சந்தைகள் உட்பட மற்றும் தலங்களும் எஸ்ஓபி நடைமுறைகளுடன் வழக்க நிலையில் செயல்பட வேண்டுமென பெரிதும் எதிர்ப்பார்ப்பதாக டத்தோ ரோசாலி முகமட் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles