
மலாக்கா மாநில முதல்வருக்கு வழங்கி வந்த ஆதரவை சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண், பந்தாய் குண்டோர் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஜ்மான் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை தொடர்ந்து மலாக்கா மாநில முதல்வர் சுலைமான் தலைமையிலான அம்னோ அரசாங்கம் கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து புதிய தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கு ஆளுநர் துன் முகமட் அலி ரூஸ்தாம் அனுமதி வழங்கி இருப்பதாக மாநில சபாநாயகர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் இன்று அறிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றம் வைக்கப்பட்டிருப்பதால் புதிய தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றார் அவர்.
