29 C
Kuala Lumpur
Friday, July 10, 2026

Vetri

கோலக்குராவ் ஆற்றின் அணைக்கட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்

🔥 Views : 12
👁 Reading Now : 67

ஆற்றின் அணைக்கட்டு பிரச்சனையால் குடியிருக்கும் வீடுகள் எந்நேரத்திலும் ஆபத்தையும் பாதிப்பையும் எதிர்நோக்கலாம் என்ற அச்சத்துடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும், கிரியான் மாவட்டத்தின் கோலக்குராவ் கம்போங் ராஜா பாசா,கம்போங் தெர்சுசுன் திட்டத்தில் வசிக்கும்10 வீடுகளின் குடும்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்படுமென கோலக்குராவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் யுனோஸ் ஜமாரி கூறினார்.

கோலக்குராவ் ஆற்று நீர் அதிவேகமாக பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த பிரச்சனைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை பேரா மாநில வடிகால் நீர்ப்பாசன இலாகா மற்றும் நில மாவட்ட அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு விட்டதாகவும்,குடியிருப்பாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படா வண்ணம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வர் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles