28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

போர்ட்டிக்சன் கடற்கரையில் பணி ஓய்வு பெற்ற பொதுச்சேவை ஊழியர் மூழ்கி மரணம்

🔥 Views : 7
👁 Reading Now : 62

கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பணி ஓய்வு பெற்ற பொதுச்சேவை ஊழியர் மூழ்கி மாண்டார். இவரின் சடலம் பந்தாய் 4 மைலில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் டெண்டன் அய்டி ஷாம் முகமட் தெரிவித்தார். இதில் மரணமுற்றவர் முகமட் ரிட்ஸுவான் குணசேகரன் அப்துல்லா, (வயது 59) என்று அடையாளம் காணப்பட்டார். இவரது சடலம் கடலின் ஓரத்தில் மிதந்து கிடந்த நிலையில் அங்கிருந்த சுற்றுப்பயணி ஒருவர் கண்டுபிடித்தார். உடலில் அரிப்பு ஏற்பட்டதால் கடலுக்குச் சென்றுக் குளிக்கத் தனி ஒருவராக மோட்டார் சைக்கிளில் மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பியதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியதாக அய்டி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles