
கோலசிலாங்கூரில் உள்ள பாசீர் பெனாம்பாங் மார்க்கெட் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வியாபாரம் புரியும் 95 விழுக்காட்டு வணிகர்கள் பயனடைந்துள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். சுமார் 7 லட்சத்து 50,000 வெள்ளி செலவிலான இந்த தரம் உயர்த்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முற்றுப் பெற்றதாக இந்த மார்க்கெட்டை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னார்.
