
கடந்த வாரம் பெந்தொங் காராக் கம்போங் பாருவில் நிகழ்ந்த மோசமான தீ விபத்தில் 48 வீடுகள் மற்றும் 8 கடைகள் முற்றாக அழிந்தன. வீடுகளை இழந்த மக்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். பகாங் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி இன்று தீ விபத்து நடந்த இடத்திற்கு வருகை புரிந்தபோது சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் நிலவரங்களை எடுத்து விளக்கினார். தீ விபத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகளை விரைந்து கட்டிக் கொடுக்கும்படி மந்திரி பெசாரை அவர் கேட்டுக் கொண்டார். மேலும் T.O.l நிலத்தில் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இரண்டு குடும்பங்களும் தீ விபத்தில் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கும் மாநில அரசாங்கம் உதவ வேண்டும் என்று காமாட்சி துரைராஜ் வலியுறுத்தினார்.
