28.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

எழுதப் படிக்க தெரியாத மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் Dyslexia அமைப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 20

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இன்னமும் எழுத்துக்கூட்டி படிக்க தெரியாத நிலையில் பலவீனமாக இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவும் பொருட்டு Dyslexia அமைப்பு சிலாங்கூர் மாநில செந்தோசா சட்டமன்ற சேவை மையத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சி பட்டறையை நடத்தியுள்ளது
Membaca, menulis, mengeja என்ற படித்தல், எழுதுவது, எழுத்துக் கூட்டுவது போன்ற மூன்றிலும் மாணவர்கள் எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் இந்த பயிற்சிப்பட்டறை தொடக்கி வைத்து ஆதரவு வழங்கினார். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பத்து வயது நிரம்பிய மாணவர்கள் தங்களது பெயரை கூட எழுதமுடியாமல் இருக்கிறார்.
கல்வியில் பின் தங்கி இருக்கும் இதுபோன்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்று டாக்டர் உமா தெரிவித்தார்.


வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாமல் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு உதவும் இலக்கில் இந்த திட்டத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.
மாணவர்களுக்கு இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சிக்கு டாக்டர் குண ராஜ் மற்றும் கவுன்சிலர் பிரபு ஆதரவு வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles