
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது அமைச்சர் அஸ்மின் அலி எஸ்ஓபி விதிமுறையை மீறியதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நோய்த்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோன்புப் பெருநாளின் போது மக்கள் மாநிலம் மற்றும் மாவட்டங்கள் கடக்க அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் அஸ்மின் அலி குடும்பத்தினர் மாவட்டத்தைக் கடந்து நோன்புப் பெருநாளை கொண்டாடி இருப்பதாக புகார் செய்யப்பட்டுள்ளது. புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பாட் சில் இதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அஸ்மின் அலி இல்லத்தில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் படங்களையும் உம்மி ஹபில்டா என்ற ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
