
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கும் பிரச்சாரத்தில் உங்கள் “வாட்சாப்” புலனம் வழி பிரச்சாரம் செய்ய தாழ்மையுடன் வேண்டுகிறோம் என்று பிரச்சாரக் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. வரும் 2022 மார்ச் மாதத்தில்தான் முதலாம் ஆண்டு பள்ளிகள் ஆரம்பமாகும். 527 தமிழ்பள்ளிகளில் வெறும் 52 விழுக்காடு இந்தியர்கள் தங்களின் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். ஆக நமக்கு இன்னும் 4 மாதங்கள் உண்டு. தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் பதிவு ஆண்டுக்கு ஆண்டு குறைவதால் நம் தமிழ் மொழி கல்வி பெரும் ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.* தமிழ்ப்பள்ளிகளின் மேன்மைக்கு நீங்கள் உங்கள் புலனம் வழி ஊடகங்கள் வழி இச்செய்தியை உங்கள் உறவுகளுக்கு அனுப்புங்கள் என்று தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு பிரச்சார குழு கேட்டுக்கொண்டுள்ளது.