
எதிர்காலத்தில் பிள்ளைகளை சிறந்தவர்களாக கண்ணால் பார்ப்பதற்கு பெற்றோர்கள் கடமையாக கொண்டிருக்க வேண்டும்.அவர்களை பல்கலைக்கழகத்திற்கும்,உயர்களைவிக்கும் செல்வதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென மலேசியக் குற்றத்தடுப்பு அறவாரியத்தின் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் டத்தோ கே.ஆர்.புலவேந்திரன் கூறினார்.
இதனை கருத்தில் பிள்ளைகளை ஆங்காங்கு ஏற்பாடு செய்து நடத்தப்படும் கருத்தரங்கு,மாநாடுகள் போன்றவற்றில் பங்கேற்க ஊக்கமளிக்க வேண்டும்.பெற்று சீராட்டி வளர்த்த நமது பிள்ளைகள் தீய வழிகளில் செல்வதை காண கூடாது என்றார்.
அண்மையில் பினாங்கு பற்றாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குற்றச்செயல்களுக்கு எதிரான கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அவர் இவ்வாறு உரையாற்றினார்.நமது இளைய தலைமுறைக்கு இதுபோன்ற பயனான கருத்தரங்குகளை தொடர்ந்து தொடர்ந்து நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பினாங்கு பற்றாளர் இயக்கத்தின் ஆலோசகரும்,தொழில் முனைவருமான ஆர்.காளிதாஸ் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில்,பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன்,பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜி.பி.துரைசாமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



