
வாரிசான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சிந்துமின் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யூசோப் யாக்கோப்பை நீதிமன்றத்திற்கு இழுப்பேன் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபி அப்டால் கூறினார். கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் கட்சியை விட்டு விலகினால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்றார். கட்சியை விட்டு விலகுவது சத்திய பிரமாண கடிதத்தில் கையொப்பமிட்டதற்கு எதிரானது என அவர் கூறினார். நேற்று முன்தினம் வாரிசான கட்சியிலிருந்து சிந்துமின் சட்டமன்ற உறுப்பினர் விலகியிருப்பது குறித்து அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
