
வரும் பொதுத்தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் அணி தாவிய துரோகிகளின் அனைத்துத் தொகுதிகளையும் பி.கே.ஆர். கைப்பற்றும் என்று பினாங்கு மாநில கெஅடிலான் துணைத் தலைவர் சிம் ஷி ஸின் தெரிவித்தார். நிபோங் திபால் நாடாளுமன்றம், செபெராங் பிறை மற்றும் சுங்கை ஆச்சே சட்டமன்ற தொகுதிகளையும் கெஅடிலான் கைப்பற்றும். மேலும் பக்கத்தானுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட செய்தாம் மற்றும் தெலுக் பஹாங் ஆகிய இரண்டு பெர்சத்து கட்சிகளின் சட்டமன்றத் தொகுதிகளையும் கெஅடிலான் கைப்பற்றும். வரும் பொதுத்தேர்தலில் நம்பிக்கைத் துரோகிகளை மீண்டும் போட்டியிட்டால் மாநில வாக்காளர்கள் அவர்களை புறக்கணிப்பார்கள் என்று அவர் சொன்னார்.
