
முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ தோமி தோமஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர் முகமட் அடிப் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் அமைக்கும் எந்த ஒரு குழுவும் பல் இல்லாத புலிக்கு சமம் என்று பிரபல வழக்கறிஞர் ஸ்ரீ முருகன் அழகன் தெரிவித்தார். எந்த ஒரு விசாரணை நடத்துவதற்கும் சாட்சிகளை அழைப்பதற்கும் வாக்கு மூலங்களை பதிவு செய்வதற்கும் சட்ட அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். கைது செய்வது ஆதரங்களை பறிமுதல் செய்வது மற்றும் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு தண்டனைச் சட்டம் தேவைப்படுகிறது. ஆனால் அரசாங்கத்தால் அமைக்கப்படும் விசாரணைக்குழு அல்லது பணிக்குழு தனது பணியை செய்வதற்கு அவர்கள் அதிகாரத்தை எங்கிருந்து பெறுவார்கள் என்று வழக்கறிஞர் ஸ்ரீ முருகன் கேள்வியை எழுப்பினார்.
