25.2 C
Kuala Lumpur
Sunday, July 12, 2026

Vetri

200 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல்

🔥 Views : 19
👁 Reading Now : 24

கடந்த 16 செப்டம்பர் மலேசிய தினத்தை முன்னிட்டு நேற்று இங்கு ச்சாஆ பட்டணத்தில் அமைந்துள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் 200 மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு இலவச பெட்ரோல் நிரப்பப்பட்டது ஜோகூர் மாநில இம்பியான் யாக்கின் கழக ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் தலைவர் சந்திர சேகரன் முதல் மோட்டார் வண்டிக்கு பெட்ரோல் நிரப்பி அதிகாரப்பூர்வமாக நிகழ்வை தொடக்கி வைத்தார். பல இன மக்கள் வாழும் நமது நாட்டில் மலேசிய தினம் ஒரு ஒற்றுமையின் அடையாளமான நாளாக கருதப்படுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்பதோடு அனைத்து மலேசியர்களும் நாம் மலேசியர்கள் எனும் நோக்கத்தோடு வாழ வேண்டும். அதுவே இந்த பெட்ரோல் நிரப்பும் நிகழ்வின் நோக்கம் என அதன் தலைவரும் ஜசெகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சந்திர சேகரன் ஆறுமுகம் குறிப்பிட்டார். மேலும்,இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக நெகிரி செம்பிலான், தம்பின் வட்டார நகராண்மை கழக உறுப்பினர் திரு. தேவிந்திரன் ரத்னம் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles